Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே டி ஆர் சுரேஷ் தலைமையில் கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

0

 

திருச்சியில் இன்று பரபரப்பு
இந்திய நாடார் பேரவை நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்திய நாடார் பேரவையின் முன்னாள் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய நாடார் பேரவை தலைவர் ஜெ.டி.ஆர். சுரேஷை நேற்று மாலை கண்டோன்மெண்ட் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.


அப்போது அவரை காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து இன்று இந்திய நாடார் பேரவை நிர்வாகிகள் தலைவர் சுரேஷ் தலைமையில் கண்டேன்மென்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது பற்றிய தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தில் பேரவையின்
பொதுச் செயலாளர் ராஜ்குமார், தலைமைச் செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் எஸ்.வி. கணேசன், துணை பொருளாளர் கே.ஆர்.பி. ராஜா,மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன்,
அமைப்புச் செயலாளர் அய்யனார் பொன்ராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் சாம்சன், புறநகர் துணைத்தலைவர் அருள்தாஸ்,புறநகர் இளைஞரணி செயலாளர் அஜின்,
செய்தி தொடர்பாளர் ஞானகுமார்,மண்டலத் தலைவர் ஜான் வெஸ்லி, மாநகரத் துணைத் தலைவர் கே. செல்வராஜ்,
மாநகர் மாவட்ட செயலாளர் பீமநகர் ராஜேஷ், மாவட்ட அமைப்பாளர்
பரமசிவம், மாநகர துணை செயலாளர் பூலோக பாண்டியன், ஏர்போர்ட் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் சேவியர், பரமசிவன், மோசஸ், சாலமன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த திடீர் போராட்டத்தால் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.