வணக்கம் எனது மாணவ குடும்பமே என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டமளிப்பு உரையைத் தொடங்கிப் பேசினார் பிரதமர் மோடி.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
வணக்கம் எனது மாணவ குடும்பமே… மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2024ஆம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது.
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமைகொள்கிறேன். பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை ஆகிய நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின.
புதியதோர் உலகம் செய்வோம் என்றார் பாரதிதாசன். நாம் கற்ற கல்வியும் அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்தி, விவசாயிகளுக்கு உதவ வேண்டும்’’.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.