திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை பார்வையிட்ட தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தமிழக அரசின் சேவைகள், பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர, ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும்பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ‘முதல்வரின் முகவரித்துறை’ என, தனித்துறையை உருவாக்கினார்.
இதன் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.
முதல்வர் நேரடியாக மாவட்டங்களுக்கு சென்று, ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற முன்னெடுப்பின் கீழ், ஆய்வு கூட்டங்கள் நடத்தி, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள், குறிப்பிட்ட காலத்திற்குள், பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, அரசின் சேவைகள், விரைவாக, எளிதாக மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தவும், ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் அமைந்துள்ள மீனாட்சி மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
நிகழ்வில் மாநகரச் செயலாளரும் மண்டலம் மூன்றின் தலைவருமான மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் ராஜ்முகமது, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.