Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் .3ம் நாளே மண்ணை கவ்விய இந்திய அணி.

0

'- Advertisement -

 

சென்சுரியனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. இதில் 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஜஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் சொதப்பினாலும், அடுத்து வந்த விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தனர். பின்னர், களமிறங்கிய கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அந்த வகையில், 137 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.

அதனைத்தொடர்ந்து விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்தது. இதில், தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கிய ஐடன் மார்க்ராம் 5 ரன்களில் நடையைக்கட்டினார். மறுபுறம் பொறுமையாக விளையாடிய டீன் எல்கர் சதம் விளாசினார்.

அதன்படி, 287 பந்துகள் களத்தில் நின்ற அவர் 185 ரன்களை எடுத்தார். அதோடு டேவிட் பெடிங்காம் 56 ரன்களும், மார்கோ ஜான்சன் 84 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக 108. 4 ஓவர்கள் களத்தில் நின்ற அந்த அணி மொத்தம் 408 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 32 ரன்கள் வித்தியாத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி.

இந்தப் போட்டி மூன்றாம் நாள் முடிவுக்கு வந்தது . ஆட்டநாயகனாக டீன் எல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.