ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி வாகனத்துடன் கைது .
திருவரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவரங்கம் நான்கு கால் மண்டபம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் சோதனையிட்டு பார்த்தபோது பண்டல் பண்டலாக ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை கொண்டு செல்வதற்கான இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கந்தவேல் திருவரங்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா தலைமையிலான போலீசார் வியாபாரி முருகானந்தத்தை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, யாரேனும் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.