திருவள்ளூர் மாவட்டம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
கட்டிடம் பழுதடைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமம் அடைந்தனர். இதனால் இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால், கட்டடம் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பள்ளி கட்டடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து, திருவாலங்காடு வட்டார கல்வி அலுவலர் முன்னிலையில் பள்ளிக் கட்டடம் திறக்கப்பட்டது.
அப்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளே சென்றதும் தரை உடைந்து கற்கள் பெயர்ந்தன. இதனால் மாணவர்களும், ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து பள்ளிக் கட்டடம் தரமாக இல்லை என கடந்த மாதம் 20-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும், அதிகாரிகள் பள்ளியை உரிய முறையில் ஆய்வு செய்யாமலேயே தரமாக உள்ளதாக சான்றளித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு கோரிக்கை விடுத்துள்ளது.