கடந்த வருடம் தஞ்சாவூரில் ஒரு சம்பவம் நடந்தது.. மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 17 வயதில், ஒரு மகள் இருக்கிறார்.. இந்த சிறுமி ஸ்கூலுக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்..
சிறுமி: சில நாட்களாகவே, சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. பிறகு திடீரென ஒருநாள் வயிற்று வலி அதிகமாகிவிட்டது.. இதனால் பதறிப்போன பெற்றோர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மகளை கொண்டு போய் அனுமதித்தனர்…
டாக்டர்கள் செக் செய்து பார்த்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது, அதுவும் நிறைமாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து, சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்தது.. மருத்துவமனை டாக்டர்கள், உடனடியாக அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், போலீசாரும் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
யார் காரணம்: அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன்தான் இதற்கெல்லாம் காரணம் என்றும், தன்னுடன் நெருக்கமாக பழகியதால் கர்ப்பமானதாகவும் சிறுமி வாக்குமூலம் தந்தார்.. 12 வயது சிறுவனா? என்று போலீசார் ஷாக் ஆகிவிட்டனர்.. பிறகு, போக்சோவில் வழக்கு பதிவு செய்து, 12 வயது சிறுவனை கைது செய்ததுடன், நீதிபதி முன்பு சிறுவனை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். சிறுவனுக்கு மெடிக்கல் செக்கப் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்…
பிறகு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவனை அனுப்பி வைத்தனர். ஆனால், உண்மையிலேயே 12 வயது சிறுவன்தான் காரணமா? என்று அதிர்ச்சியடைந்ததுடன், பெரும்பாலானோரால் இந்த சம்பவத்தை நம்பவே முடியவில்லையாம்..
விசாரணை: எனவே, சிறுவனிடம் மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறுமியிடமும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. அதற்கு பிறகு இந்த செய்தி குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதோ இப்போதும் ஒரு கொடுமை கோவையில் நடந்துள்ளது.. பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த 13 வயது சிறுமி, கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு பக்கத்திலேயே, பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவனும் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அதிர்ச்சி: இந்நிலையில், சிறுமியின் வீட்டில் யாருமில்லாதபோது, அங்கு சென்ற சிறுவன், சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்… அதுமட்டுமல்ல, இதை பற்றி யார்கிட்டயாவது சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்..
இதற்குநடுவில், சிறுமிக்கு திடீர்னு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது.. அதனால், அவரை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்,
டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள். இதைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர், மகளிடம் விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான், 12 வயது சிறுவன் தான் இதற்கெல்லாம் காரணம் என்பது தெரிய வந்தது. இதற்கு பிறகு, ஆத்திரமடைந்த பெற்றோர், கருமத்தம்பட்டி மகளிர் போலீசில் சிறுவனின் மீது புகார் தந்தனர்..
கோவை பரபர: இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் , சிறுவனை கைது செய்து போக்சோ கோர்ர்ட்டில் ஆஜா்படுத்தினர். இறுதியில், சிறுவன் மீது போச்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க நீதிபதி குலசேகரன் உத்தவிட்டதையடுத்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டிருக்கிறர்..
இந்த சம்பவம் இப்போது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பெற்றோர்கள் தினம் தினம், வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்தால்.. இப்படியெல்லாம் நடப்பதை என்னவென்று சொல்வது? இதற்கெல்லாம் யார் காரணம்? பெற்றோர்களா? சோஷியல் மீடியாவா? சூழ்நிலையா? அல்லது எல்லாருமா? தெரியவில்லை.. இந்த கலியுகத்தில், இன்னும் என்னவெல்லாம் நாம பார்க்க வேண்டி இருக்கோ?!