திருச்சியில்
வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணம் திருட்டு.

திருச்சி கருமண்டபம் விஷ்வாஷ் நகர் விஸ்தரிப்பு மூன்றாவது தெரு வசந்த் நகரை சேர்ந்த மூதாட்டி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மகனை பார்ப்பதற்காக பெங்களூர் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் பூட்டி இருந்த வீட்டை மூதாட்டியின் மகள் அனிதா அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வாராம். சம்பவத்தன்று பக்கத்து வீட்டில் உள்ள நபர்கள் அனிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் தாய் வீட்டில் கதவு திறந்து இருக்கிறது என்று கூறியுள்ளனர். இதை கேட்டு பதறி அடித்து ஓடி வந்து அனிதா வீட்டை பார்த்த பொது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டு பவுன் நகை, ஜிமிக்கி, தங்க நாணயம் உள்ளிட்ட மூன்று பவுன் நகை மற்றும் ரூபாய் 20,000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அனிதா கன்டோன்மெண்ட்குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டி இருந்த வீட்டை உடைத்து நகை பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.