அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகநாதர் சிவாவின் ஏற்பாட்டில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் 47வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் முன்னிலையில், மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.