Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காங்கிரஸ் எம்பி வீட்டில் ரூ.300 கோடி ரொக்கம். திமுக மவுனம் சாதிப்பது ஏன்? அமித்ஷா கேள்வி .

0

'- Advertisement -

பாட்னா: ஒடிஷாவில் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவின் வீட்டில் ரூ300 கோடி ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்து இந்தியா விடுதலைக்குப் பின் சிக்கிய பெரும் தொகையான பணம்; இந்த விவகாரத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்டவை ஏன் மவுனமாக இருக்கின்றன?
என மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி தீரஜ் சாகுவுக்கு சொந்தமான வீடு, மதுபான தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது தீரஜ் சாகு வீட்டு அலமாரிகளில் ரூ500 கட்டுகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரொக்கம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு 5 நாட்களாக எண்ணப்பட்டன. மொத்தம் ரூ300 கோடி ரொக்கம் அலமாரிகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. நாடு முழுவதும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட போது, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பணமும் மக்களுக்கே திருப்பி தரப்படும். இது மோடியின் வாக்குறுதி என்றார்.

இதேபோல மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதாவது: ரூ300 கோடி ரொக்கம் சிக்கியது ஆச்சரியமானதாக இருக்கிறது. நாடு விடுதலைக்குப் பின் இவ்வளவு பெரிய தொகை ஒரு எம்பியின் வீட்டில் இருந்து முதல் முறையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மவுனமாக இருக்கலாம்.

ஆனால் ஒட்டுமொத்த “இண்டி” (இந்தியா) கூட்டணி கட்சிகளான ஜேடியூ, ஆர்ஜேடி, திமுக, சமாஜ்வாதி கட்சிகள் மவுனமாக இருப்பது ஏன்? இப்போதுதான் புரிகிறது இவர்கள் ஏன் பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள் என்பது.. இவர்கள் ஏன் மத்திய ஏஜென்சிக்கு எதிராக பேசுகிறார்கள் என்பது இப்போது புரிகிறது. அத்தனை கட்சிகளுக்கும் அச்சம் வந்துவிட்டது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இதற்கு பதிலடியாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியதாவது: ஒடிஷாவில் ரூ300 கோடி சிக்கியதாக சொல்லப்படும் காங்கிரஸ் எம்பி ஊழல் செய்தாரா? அவர் ஒரு தொழிலதிபர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய அமைச்சராக பணிபுரிந்தவரா? இல்லையே? 40 ஆண்டுகளாக தொழில் செய்து வருபவர். அப்படியானால் நரேந்திர தோமர் மகனின் ரூ500 கோடி டீல் என்னாச்சு? . இவ்வாறு மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.