ரூ.4610 கோடியை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க பிரதமருக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனர் இடிமுரசு இஸ்மாயில் வேண்டுகோள் .
சென்னை மிக் ஜாம் புயல் நிவாரணத்திற்க்கு முதலமைச்சர் கேட்ட 5060 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும். இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னையில் மிக் ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் மழை கொட்டியதால் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் வீடுகளில் மழைநீர் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மின்சாரத்தை துண்டித்த காரணத்தால் பலத்த உயிர்சேதம் ஏற்படவில்லை.
மழை வெள்ளத்தால் மக்களை காப்பாற்றிட தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி பார்வையிட்டு மழைநீரை அப்புறப்படுத்த ஆணையிட்டதோடு அமைச்சர்கள் உதயநிதி, நேரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் மேயர் பிரியா, அரசு அதிகாரிகள் என அரசின் அத்தனை துறைகளையும் களத்தில் இறக்கி பணிசெய்ய ஆணையிட்ட முதலமைச்சரின் அயராத பணிகள் பாராட்டதக்கதாகும்.
மக்களின் துயர்துடைக்க தமிழக அரசு எடுத்த போர்கால நடவடிக்கை புயலை விட வேகமாக இருந்ததால் சென்னையின் இயல்பு வாழ்க்கை 90 சதவீதம் உடனடியாக மீட்கப்பட்டது.
நல்லாட்சியின் நாயகன் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றபிறகு மழை நீர் வடிகால் பணிகளுக்கு 5166 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் கொசஸ்தலை ஆறு வடிகால் பணி 1903 கோடி ரூபாயிலும், கோவளம் வடிகால் பணிகளுக்கு 220 கோடியே 24 லட்சமும் செலவு செய்து பாதி வேலைகள் முடிந்த காரணத்தால்தான் வெள்ளத்தினால் ஏற்பட்ட மழைநீரை உடனடியாக வெளியேற்ற முடிந்ததை பாராட்டுகிறேன்.
வெள்ள பாதிப்பில் இருந்த மக்களுக்கு நிவாரண முகாம்கள் அமைத்து, ரப்பர் படகுகளில் மக்களை மீட்டதோடு,உணவு உடைகள் குடிநீர் வழங்கி மக்களின் துயர் துடைத்த தமிழக அரசின் செயல்கள் போற்றதலுக்குரியதாகும்.
இந்த மிக் ஜாம் புயல் பாதிப்பை முழுமையாக சரிசெய்திட தமிழக முதல்வர் ஒன்றிய அரசிடம் 5060 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு வழங்கிய 450 கோடி போக மீதம் உள்ள 4610 கோடி ரூபாய் பணத்தை உடனடியாக தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் பிரதமர் மோடி கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார் .