திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் டிப்பர் லாரி மோதி
2 திருநங்கைகள் பரிதாப பலி.
திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள் தனியா (வயது 25,) தமிழ் (வயது 29). இவர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே இன்று அதிகாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற டிப்பர் லாரியை பூதலூர் அயோத்திபட்டியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் திருநங்கைகள் அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே டிப்பர் லாரியை முந்தி செல்ல முற்பட்டபோது , நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தன்யா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு திருநங்கையான தமிழை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விபத்து குறித்து வந்து வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மணிமாறன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.