ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம்: அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது ‘
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிகழ்வுகள்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
கழக தலைமை நிலைய செயலாளரும், மண்டல, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , பொறுப்பாளருமான ராஜசேகரன் வழிகாட்டுதலின்படி,
இன்று, திருச்சி மாநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும்,
மாநகர் மாவட்ட கழக செயலாளரும் 47வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் முன்னிலையில்,
மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவப்படத்திற்குமாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்வு 1:
மாநகர் மாவட்ட கழக இளைஞர் பாசறை செயலாளர் ஜான் கென்னடி அவர்களின் ஏற்பாட்டில்
மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் தனசிங் அவர்களின் தலைமையில்,
நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில், அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வு 2:
திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட அவை தலைவர் எம்.எஸ்.
ராமலிங்கம் அவர்கள் தலைமையில், அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வு 3:
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு, 2-வது வட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாட்டில், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் இளையராஜா அவர்களின் தலைமையில், அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வு 4:
EB ரோட்டில், காந்தி மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் வேதாந்திரி பாலு தலைமையில், அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வு 5:
பீம நகர், கூனி பஜார் பகுதியில், தில்லைநகர் பகுதி 52 வது வட்டக் கழக செயலாளர் ஜான் அவர்களின் ஏற்பாட்டில், தில்லை நகர் பகுதி செயலாளர் செல்வம் அவர்கள் தலைமையில், அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வு 6:
முத்தரசநல்லூர் ஊராட்சி மற்றும் திருப்பராய்த்துறை ஊராட்சியில், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில், அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வு 7:
சோமரசம்பேட்டை ஊராட்சி மற்றும் அல்லித்துறை ஊராட்சியில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமையில், அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வு 8:
ஏர்போர்ட் பகுதி செயலாளர் திரு மதியழகன் அவர்கள் தலைமையில், ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட பல இடங்களிலும், அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்வுகளில்,
மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,
ஒன்றிய, பகுதி, பேரூராட்சி,ஊராட்சி , வட்ட , கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.