திருச்சி மாநகரில் சாலை ரோடு – மெயின் கார்டு- கேட்டை இணைக்கும் வகையில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. 157 ஆண்டுகள் பழமையான அந்த பாலம் வலுவிழந்துள்ளதால் அங்கு புதிய பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு
அந்த மேம்பாலம் அகலப்படுத்தி கட்டுவதற்கு ரூ.34.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பால கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
அந்தப் பணிகள் அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல
காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறை அருகே ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அந்த பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,
மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன்,
மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்,துர்கா தேவி,பகுதி செயலாளர்கள் நாகராஜ், மோகன் தாஸ்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,அந்தநல்லூர் சேர்மன் துரைராஜ், ,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், ப,கவுன்சிலர்கள் மண்டி சேகர் ,கலைச்செல்வி ஜெகநாதன், புஷ்பராஜ் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பறவைகள் சரணாலயம் பூமி பூஜைக்கு பின் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழகத்தில் இது போன்ற பறவைகள் சரணாலயம் அமையவது திருச்சியில் தான் முதல் முறை என பெருமை கொண்டார்.
இதற்கு பின் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி எனது தொகுதியில் அண்ணன்
கே.என்.நேரு
ரூ.13.70 கோடியில் காதலர் சரணாலயம் கட்டியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி என பேசினார்.
உடனே மேடையில் அமர்ந்து இருந்த கே.என்.நேரு .
ஏதோ சொல்ல உடனடியாக தனது பேச்சை மாற்றினார்.
தற்போது சட்டமன்ற உறுப்பினர் பேசிய காதலர் சரணாலயம் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.