Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் இன்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் அன்னதானம்.

0

 

ஐயனை வழிபட்டால் ஆயிரமாயிரம் தொல்லைகள் நீங்கும்.

திருச்சி வழியாக சபரிமலை பயணம் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக திருச்சி ஶ்ரீரங்கத்தில் சிறப்பு சேவை முகாம் இன்று 17.11.2023 காலை முதல் விமரிசையாக துவங்கப்பட்டது.

இந்த முகாம் தொடர்ந்து 14.01.2023 வரை அதாவது பொங்கலுக்கு முதல் நாள் வரை தொடர்ந்து 60 நாட்கள் நாடைபெற‌ உள்ளது.இம் முகாமில், தினமும் காலை மற்றும் மாலை இரு வேளையும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றி உள்ள திருகோயில்கள் குறித்தும், செல்லும் வழியில் உள்ள முக்கிய திருக்கோயில்கள் குறித்தும், ஐயப்ப சேவா சங்கத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள சேவை முகாம்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.சபரிமலை தரிசனம் ஆன்லைன் புக்கிங் மற்றும் பூஜைகள் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படும்.காலை மற்றும் மாலை வேளைகளில் வரும் யாத்ரிகர்களுக்கு சங்க மருத்துவர்கள் கொண்டு இலவசமாக மருத்துவ உதவிகள்‌ வழங்கப்படுகிறது.
திருச்சி வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள் இரவு தங்க நேர்ந்தால் அவர்களுக்கு தங்குவதற்கு (குளிக்க மற்றும் இயற்கை உபாதைகள் கழிக்கும் வசதியுடன்) இடம் தயாராக உள்ளது.பிற மாவட்டத்தினர் முன் கூட்டியே அறிவித்தால் இரவு உணவும் மதிய உணவும் வழங்கப்படும். இப்படி தொடர்ந்து 12 ஆண்டுகளாக சிறப்பான சேவையை ஐயப்பசேவா சங்கம் சிறப்பான சேவை வழங்கி வருகிறார்கள். ஆகவே இந்த மாபெரும் வசதியை எந்த வித கட்டணமும் இன்றி தமிழகம் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களும் உபயோகப்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.