திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்திய கணக்கியல் அமைப்பின் திருச்சி கிளையின் நிதி உதவியுடன் கணக்கியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் வளர்ந்து வரும் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் சார்பில் நடைபெற்றது.
இப்பயிலரங்கில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பு சு விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை தலைவர் முனைவர் வி சரோஜா வரவேற்புரை வழங்கினார்.
இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்தும் இந்திய கணக்கியல் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் வணிகவியல் துறை இணை பேராசிரியர் மற்றும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் செ. பரமசிவன் விளக்கினார்.
இந்நிகழ்வில் தேசியக் கல்லூரியின் பேராசிரியரும் இந்திய கணக்கியல் அமைப்பின் துணை தலைவருமான முனைவர் சந்திரா , முதல்வர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
சிறப்பு விருந்தினராக மதுரை கல்லூரியில் வணிகவியல் துறை தலைவரும் இணை பேராசிரியருமான முனைவர் அ . மயில் முருகன் இந்திய கணக்கியல் கல்வி மற்றும் ஆய்வின் நிலை குறித்தும், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் கணக்கியலின் பரவலாக்கப்பட்ட எல்லைகள் மற்றும் தன்மைகள் குறித்தும் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும், உலகளாவிய நிறுவனங்களில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில மாணவர்களுக்கு விளக்கினார்.
மற்றொரு அமர்வில் திருச்சிராப்பள்ளி செலவு கணக்கியல் மேலாண்மையில் பிரிவின் உறுப்பினருமான அ ஆரிப்கான் செலவு கணக்கியலில் இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்தும், மாணவர்கள் எவ்வாறு செலவு மற்றும் நிர்வாக கணக்கியலில் பட்டயம் பெறுவது குறித்தும், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் விளக்கினார். கருத்தரங்கில் இறுதியாக வணிகவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் சுதா நன்றியுரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தந்தை பெரியார் அரசு கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.