Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வெங்காயம் விலை மேலும் உயர்கிறது.

0

 

பெங்களூரு, மைசூரு, பெல்லாரி மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் 2ம் கட்டமாக அறுவடை செய்யப்படும் பெரிய வெங்காயம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விற்பனை செய்யப்படும்.

மேலும், மைசூரு, பெல்லாரி மற்றும் கர்நாடகாவில் இருந்து அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் திருச்சிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

அறுவடை முடிந்து, பருவமழை துவங்கியுள்ளதால், சின்ன, பெரிய வெங்காயம் வரத்து குறைய துவங்கி, விலை உயர துவங்கியுள்ளது.சில்லரை விற்பனையில் சின்ன வெங்காயம் ரூ.90 முதல் ரூ.கிலோ 110-க்கும், பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.64 கிலோ.

வெங்காய மொத்த வியாபாரிகள் கூறிய போது:-

மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினமும் 960 டன் பெரிய வெங்காயம், 240 டன் சின்ன வெங்காயம் திருச்சி வெங்காய மார்க்கெட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி வெங்காய மார்க்கெட்டில் இருந்து அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேவகோட்டை, திண்டுக்கல் விற்பனைக்கு அனுப்பப்பட்டது.

தற்போது 240 டன் பெரிய வெங்காயமும், 50 டன் சின்ன வெங்காயமும் மட்டுமே விற்பனையாகிறது.50 கிலோ எடையுள்ள பெரிய வெங்காயம் மூட்டை ரூ.2,500 முதல் ரூ.3,500 வரையிலும், சின்ன வெங்காயம் மொத்த விலையில் ரூ.3,000 முதல் ரூ.4,500 வரையிலும் சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம்.

மகாராஷ்டிரா சீசன் முடிந்தாலும், கர்நாடகாவில் இருந்து வர வேண்டிய வெங்காயம் வந்தால் மட்டுமே விலை குறையும்.இதுகுறித்து அங்குள்ள வியாபாரிகள் கூறுகையில், மழையால் பல இடங்களில் வெங்காயம் பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நெருங்கி வருவதால் வெங்காயம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.