திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கருமண்டபம் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்.முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா பங்கேற்பு.
திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட, கருமண்டபம் பகுதி கழகத்தின் சார்பில், பகுதிகழகச் செயலாளர் கலைவாணன் ஏற்பாட்டில், எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள முன்னாள் மாவட்ட செயலளார் கே.சி பரமசிவம் இல்லத்தில், பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,
பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைக்கப்பட்ட நிலை குறித்தும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கையேடு, ஆதார் எண் இணைப்பு, தொடர்பு எண் ஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தினார்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை கருமண்டபம் பத்மநாதன், பொறியாளர் இப்ராம்ஷா, கவுன்சிலர் அரவிந்தன், வட்ட செயலாளர்கள்
டி.எஸ்.எம். செல்வமணி,
கே.சி.ஆனந்தன்,டாஸ்மாக் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.