திருச்சி மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்/ அமைப்புச் செயலாளர் செம்மலை, தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் பங்கேற்பு.
அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மணப்பாறையில் பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
.
புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை பங்கேற்று பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர், சின்னசாமி, எஸ்.எம் பாலன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வமேரி ஜார்ஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.