பூக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய
அ.தி.மு.க. நிர்வாகி குண்டர் சட்டத்தில் அடைப்பு.
திருச்சி திருவானைக்காவல் ஆர்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்தவர் படையப்பா என்கிற ரங்கராஜ் (வயது 43).
இவர் கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் பூக்கடைக்காரர் ஒருவரை முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து படையப்பா ரங்கராஜை கைது செய்தனர்.
இந்த நிலையில் கைதான ரங்கராஜ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வந்ததால் அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அந்த ஆணை திருச்சி மத்திய ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
(படையப்பா ரங்கராஜ் ஓர் தேசிய விவசாய சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். அந்த சங்கத்தின் தலைவர் காவல்துறையினரை ஒருமையில் பேசுவர் மேலும் காவல்துறையை நான் பார்த்துக் கொள்கிறேன் என அவர் கூறியதாக கூறப்படுகிறது.
. இதானல் தன்னை கைது செய்ய வந்த போலீசாரை விவசாய சங்க தலைவரை நம்பி எதிர்த்து பேசியதால் வந்த நிலை இது.இவர் மீது இதற்கு முன் எந்த குற்ற வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)