Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: தொடர் நாயகன் விருதை வெல்லும் முனைப்பில் பும்ரா

0

 

இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரில் மிக சிறப்பாக ஆடி வருகிறது. வரிசையாக 3 போட்டிகளில் வென்று இந்தியா அசத்தி உள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட ஆனது. இதன் பின் இறங்கிய இந்திய அணி கோலியின் 85 மற்றும் கே எல் ராகுலின் 97 ரன்கள் காரணமாக இந்தியா வென்றது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால் 272-8 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிந்தது. இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131, இஷான் 47, கோலி 55 ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றிபெற்றது. இதையடுத்து நேற்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இந்த மேட்சில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து இறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் 86, ஷ்ரேயாஸ் ஐயரின் அரைசதம் ரன்கள் காரணமாக எளிதாக வென்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வந்துள்ளது.

உலகக் கோப்பை இந்திய வீரர்: இந்த மூன்று போட்டியிலும் இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது பும்ராவின் பவுலிங்தான். மூன்று மேட்சிலும் பும்ரா மிக சிறப்பாக பவுலிங் செய்து இதுவரை 8 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 10-0-35-2
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 10-0-39-4
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக 7-1-19-2 விக்கெட்டுகளை எடுத்தர்.
இந்தியா இப்படியே அதிரடியாக சென்று தொடரை வென்றால், அப்போது பும்ரா இந்த பார்மில் அப்படியே இருந்தால் கண்டிப்பாக இந்த தொடரின் தொடர் ஆட்ட நாயகன் விருதை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியர் ஒருவர்.. அதிலும் இந்திய பாஸ்ட் பவுலர் ஒருவர் இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்று சாதனை படைப்பார்.

2011 சீசனில் சகீர் கான் சிறப்பாக ஆடியும் யுவராஜ் சிங் அந்த விருதை தட்டி பறித்தார். இந்த முறை பும்ரா சிறப்பாக ஆடுவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன, 2 விக்கெட் எல்லா மேட்சிலும் எடுப்பதும், அதில் 2.7- 3 என்ற ஆவரேஜ் அவர் வைத்து இருப்பதும் பும்ராவிற்கு சாதகமாக மாறி உள்ளது.

பும்ரா 2 கடந்த வருடமாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவர் கடுமையான விமர்சனங்கள் காரணமாக அவமானங்களை சந்தித்து வந்தார். நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்தே கதறவிட்டனர். இந்த நிலையில்தான் காயத்தில் இருந்து மீண்டு வந்த பும்ரா தற்போது உலகக் கோப்பை தொடரில் வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.