பெண் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மத்திய ரிசர்வ் போலீஸ் பெண் காவலர்கள் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணி. ஜோசப் கண் மருத்துவமனையில் வரவேற்பு நிகழ்ச்சி.
பெண் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் குஜராத் வரை பாதுகாப்பு படை வீராங்கனைகள் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்
பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி ஆண்டுதோறும்
தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்க
ப்படுகிறது. பெண்களின்
முக்கியத்துவம், வலிமை, பாதுகாப்பு மற்றும் பெண் பாலின சமத்துவம்
ஆகியவற்றை வலியுறுத்தி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல
அமைச்சகம் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) ஆகியவை இணைந்து
120 பெண் மத்திய ரிசர்வ் காவல்படை(CRPF) வீராங்கனைகள் பங்கேற்ற இரு சக்கர வாகன
விழிப்புணர்வு பேரணி யானது இம்மாதம் 5ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி
கேரள மாநிலம் திருவனந்தபுரம், மதுரை, திருச்சி வழியாக
குஜராத்தில்
முடிவடைய உள்ளது.
அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக
திருச்சி அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் ஜோசப் கண்
மருத்துவமனை இணைந்து மலர் தூவி வரவேற்று உபசரித்து
வழியனுப்பும் நிகழ்வு
ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது. மாநகர காவல்துறை ஆணையர் காமினி, கலந்துகொண்டு வரவேற்றார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக
ரோட்டரி மாவட்டம் 3000ன் முன்னாள் ஆளுநர் Rtn. கோபாலகிருஷ்ணன்,
கார்த்திகேயன், ரோட்டரி AIS சேர்மன் ஸ்ரீனிவாசன்,
ரோட்டரி மாவட்ட திட்டங்கள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மண்டல ஒருங்கிணைப்பாளர் கேசவன், காவல் துணை ஆணையர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று உற்சாகப்படுத்தினர்.
மேலும் ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், உதவிய ஆளுநர்கள்,தலைவர்கள் செயலாளர்கள் ஜோசப் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பலர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
இறுதியில் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகி சுபா பிரபு அனைவருக்கும் நன்றி கூறினார்.