Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என் ஐ டி யில் மாணவ மாணவிகளின் கலை திறனை வெளிப்படுத்தும் புதிய செயலி (ஸ்டார் டா) அறிமுகம்.

0

 

திருச்சியில் ஸ்டார் டா செயலி அறிமுக விழா.

திருச்சி திருவெறும்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பெஸ்டம்பர் – 23 எனும் வருடாந்திர கலை விழா நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘

இதில் மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் கலைத்திறன்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட
ஸ்டார் டா செயலி அறிமுக விழா நடைபெற்றது.

இதில் செயலியின் முதன்மை செயல் அதிகாரி நரேஷ் கலந்து கொண்டு செயலியை அறிமுகம் செய்து, செயலிக்கான அரங்கத்தை தொடங்கி வைத்தார்.

தொடந்து ஸ்டார் டா செயலி குறித்து அவர் கூறுகையில்…

இந்தியாவில் பலருக்கு நடிப்பு, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் இருந்தாலும் அதனை வெளிக்காட்ட சரியான தளம் அமையவில்லை. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஸ்டார் டா செயலி.
இந்த செயலியில் கலைஞர்கள் தங்களது பெயர் புகைப்பட விவரத்தினை பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் எங்களிடம் தொடர்பில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மூலம் இவர்களுக்கான வாய்ப்பு பெற்று தரப்படும்.

 

சென்னையில் திறமையான பல கலைஞர்கள் இருந்தாலும் திருச்சியில் உள்ள கலைஞர்களுக்காக இந்த செயலியை திருச்சியில் அறிமுகம் செய்துள்ளோம். மேலும் என்.ஐ.டி கல்லூரியில் நடைபெற்று வரும் பெஸ்டம்பர் கலை விழாவில் நடனம், பாட்டு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை இந்த செயலியில் இணைப்பதன் மூலம் அவர்கள் வளர்ச்சிக்கு இது உதவும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.