தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியில் மகளிர் கிரிக்கெட் தொடர்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மகளிர் கிரிக்கெட் தொடர் தொடங்கியது .
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, ராயல் கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவனம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் போட்டி
பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் மாநிலம் முழுவதுமிருந்து சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அடங்கிய ரெயின்போ வாரியர்ஸ், ஸ்பார்க் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா பியர்லெஸ், பைட்டர், சவுண்ட் ஆஃப் வில்லோ, நத்திங் பட் கிரிக்கெட், ஸ்மைலிங் பேர்லஸ், எஸ்பிவி சென்னை ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளை திருச்சி சிஎஸ்ஐ பேராயர் சந்திரசேகரன் தொடங்கி ராயல் கன்ஸ்ட்ரக்ஷன் இயக்குனர் பிரின்ஸ்,விஜயகுமார் கல்லூரி முதல்வர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .
30 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடர் 5 நாட்கள் நடைபெறுகிறது.
இறுதி போட்டி வருகின்ற 7ம் தேதி நடைபெற உள்ளது, அன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.