திருச்சியில் இம்மானுவேல் சேகரனார் திருவுருவ சிலை அமைத்திட தீர்மானம் நிறைவேற்றம். தமிழக தேவேந்திர குல வேளாளர் நல சங்கம் -இந்திர தேச மக்கள் கட்சி நிறுவனர் பாச. ராஜேந்திரன் நன்றி.

தமிழக தேவேந்திர குல வேளாளர் நலச் சங்கம்-இந்திர தேச மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர். எழுச்சிவேந்தன்.பாச. இராஜேந்திரனின் வேண்டுகோளை தாயுள்ளத்தோடு ஏற்று,தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி திமுகவின் முதன்மை செயலாளரும், தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேருவின் ஆணைக்கிணங்க, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர்.மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி தீர்மானக் குழு கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் அடையாளமாய் திகழும், சமூக போராளி.தேசிய தலைவர்.தியாகி.
இமானுவேல் சேகரனாரின் முழு உருவச்சிலையினை திருச்சிராப்பள்ளியில் உழவர் சந்தை அருகில் அமைத்திட தீர்மானம் நிறைவேற்றித் தந்தமைக்காகவும், அச்சிலையை நிறுவும் உரிமையையும், அதனை பராமரித்துக் கொள்ளும் பொறுப்பையும், அதன் செலவையும் தமிழக தேவேந்திர குல வேளாளர் நலச் சங்கம்-இந்திர தேச மக்கள் கட்சி ஏற்பதாக உறுதியேற்றதோடு, சிலை நிறுவ உறுதுணையாக இருந்த திருச்சி மாநகராட்சியின் 65 மாமன்ற உறுப்பினர்களுக்கும், பக்கபலமாய் இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், சங்கத்தின் சார்பிலும் உலகெங்கும் உள்ள தேவேந்திர குல வேளாளர் உறவுகளின் சார்பிலும் நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றிகளை பாச. ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.

99.99 சதவீதம் சிலை வடிவமைப்பு நிறைவுற்ற நிலையில், சிலையினை பாச.ராஜேந்திரன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளும் பார்வையிட்டனர்.

