திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட செயலாளர் கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவுடன்,
கழக துணை பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ரெங்கசாமி ஆலோசனையின் பேரில்,

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான ப.செந்தில்நாதன் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்டதிற்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், மாநகர் மாவட்ட அலுவலகத்தில், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், சுரேஷ் குமார், இளங்கோவன், பகுதிச் செயலாளர்கள் கல்நாயக் சதீஷ், கம்ருதீன், இளையராஜா, வேதாந்திரி பாலு, உமாபதி, மதியழகன், வெங்கட்ரமணி ஆகியோர் நிர்வாகிகளுடன் பங்குபெற நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் தன்சிங், பொதுக்குழு உறுப்பினர் வேதராஜன், சார்பு அணிச் செயலாளர்கள் பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவா, ராமலிங்கம், தண்டபாணி, பன்னீர் பாண்டியன் (எ) செல்வம், ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.