Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து எடுத்து வந்த ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 3 பேர் கைது.

0

'- Advertisement -

 

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணி தனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் சிறிய தங்க நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. அதேபோல் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த இரண்டு பயணிகளை சோதனை செய்தபோது அவர்கள் ஜீன்ஸ் பேண்டில் தங்க பட்டன் பொருத்தி தங்கத்தை கடத்தி வந்ததும்,

 

தங்கத்தை பிளாஸ்டிக் பேப்பரில் ஸ்பிரே செய்து அதனை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதனை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 23 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 401 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.