திருச்சி பாலக்கரையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி சங்கிலியாண்ட புரம் அன்பு நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சங்கர் (வயது 38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (வயது 36). இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இரண்டு மகன்கள் உள்ளனர். சங்கீதா தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கருக்கு ரியல் எஸ்டேட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் மன அழுத்தத்தில் இருந்த சங்கர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சங்கீதா அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.