Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோ ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

0

 

திருச்சி பொதிகை கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில்
தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பேட்டி:

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 58 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.
கோ.ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன்கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ். மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று தீபாவளி -2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தொடங்கி வைத்தார். கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் கைத்தறி துறை உதவி இயக்குனர் ரவிக்குமார், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் ஐயப்பன், திருச்சி பொதிகை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சங்கர் ,அப்துல் ரகுமான் மற்றும் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி,மாவட்டத் துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா,அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கதிர்வேல்,மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,கவுன்சிலர்கள் கலைச்செல்வி கருப்பையா, புஷ்பராஜ், வட்ட செயலாளர் தனசேகர் மாணவரணி உறையூர் கார்த்திக்செழியன் மற்றும் அதிகாரிகள், திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் கே என் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

கைத்தறி துறை சார்பாக தீபாவளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒரு கோடி 38 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு 3 கோடி ரூபாய் விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
88 ஆண்டு காலமாக கைத்தறி விற்பனை துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பண்டிகை முன்னிட்டு துணிகளை வாங்குபவர்களுக்கு 30% தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழக மக்கள் கைத்தறி மக்களை வாழ்விக்கும் பொருட்டு தாங்கள் வாங்குகிற துணிகளை கைத்தறி துணிகளாக வாங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஆண்டு கைத்தறி துறையின் சார்பாக ஒரு கருவி வைத்திருக்கிறார்கள், ஒரு நபருக்கு என்ன மாதிரி ஆடை, கலர் வேண்டுமோ அதை கணினி மூலம் உருவாக்கி தருகிறார்கள். ஆயிரம் வகையான புதிய வகை சேலைகளை நெய்வதற்கு உரிய நடவடிக்கை இந்த ஆண்டு எடுத்திருக்கிறார்கள் எனவே கைத்தறி துறை மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மக்கள் கைத்தறி துணிகளை வாங்கினால் நெசவாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் .
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.