திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் போட்டி. 3 தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து மோதல் 2 மாணவிகள் காயம்.இனியாவது நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் ?
திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் தனியார் பேருந்துகள் இடையே கடும் போட்டியால் 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதல். திருச்சியில் 3 தனியார் பஸ்கள் அடுத்தடுத்து மோதல்.இரண்டு மாணவிகள் காயம்.
பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டுக் கொண்டு வேகமாகச் சென்ற மூன்று தனியார் பஸ்கள் அடுத்தடுத்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்தனர் .
நேற்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை ,மதுரை போன்ற நகரங்களில் மாநகரில் தனியார் பஸ்கள் இயங்க அனுமதி கிடையாது. ஆனால் திருச்சி மாநகரில் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த தனியார் பஸ்கள் நாளுக்கு நாள் மக்களை மிரட்டும் வண்ணத்தில் அதிவேகமாக அச்சுறுத்தும் வகையில் தனியார் பஸ்கள் செல்கிறது.
சரியான நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்துவது கிடையாது .ஆனால் பயணிகளை ஏற்றி இறக்குவதில் போட்டோ போட்டி போட்டுக்கொண்டு பஸ் நிறுத்தங்கள் இல்லாத இடத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டு அச்சுறுத்தும் வகையில் வேகமாக செல்கின்றன.
அந்த வகையில் தான் நேற்று இந்த விபத்து நடந்துள்ளது.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு காலை சுமார் ஏழு முப்பது மணி அளவில் 3 தனியார் பஸ்கள் சென்று கொண்டிருந்தன. திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் தாண்டி ஜோசப் கண் மருத்துவமனை எதிரில் ஒரு தனியார் பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ் பயணிகளை ஏற்றுவதற்குள் பின்னால் மற்றொரு பஸ் வேகமாக வந்தது. அதற்கு பின்னால் மூன்றாவதாக மற்றொரு தனியார் பஸ் வேகமாக வந்து இரண்டாவது பஸ்ஸின் மேல் மோதியது. அதில் இரண்டாவது பஸ் முதல் பஸ் மீது மோதியது இதில் பஸ்களின் கண்ணாடி நொறுங்கியது. 3 பஸ்களிலும் இருந்த50க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்களில் இருந்து வெளியேறினர்.
இதில் இரண்டு கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து மூன்று பஸ்களையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக தனியார் பேருந்து ஓட்டுனர்களால் பெரும் விபத்து நடைபெற்று வருகிறது.சில மாதங்களுக்கு முன் காந்தி மார்க்கெட் அருகே ஒரு பெண்மணியின் காலில் ஏறி இறங்கியதால் அப் பெண்மனி மருத்துவ சிகிச்சை பலனின்றி 10 நாளுக்கு பின் உயிரிழந்தார்.அதிகாலையில் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே எதிரில் நடந்து சென்றவர் மீது பஸ் மோதியதில் ரயில்வே ஊழியர் ஒருவர் பரிதாபமாக பலியானார். ஜங்ஷன் சரஸ்வதி ஹோட்டல் எதிரே நடைபெற்ற விபத்தில் வாலிபர் ஒருவர் கால் துண்டானது. இதுபோன்று தினமும் பல பல சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இனியாவது அதிபயங்கரமாக மக்களை மிரட்டும் வண்ணம் ஏர் ஹாரன் அடித்துக் கொண்டு மிக விரைவாக உயிர் படி ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகருக்குள் செல்லும் தனியார் பஸ்கள் மீது கலெக்டர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.