திருச்சியில் வெடிகுண்டு தயாரித்து விற்ற இருவர் கைது.
திருச்சியில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ் பி ) வீ.வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அந்த வகையில் ஜீயபுரம் காவல் நிலைய போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் அப்பகுதியில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து விநியோகித்து வருவது தெரிய வந்தது.
இதனையடுத்து, தாயனூர் பகுதியைச் சேர்ந்த சு. சிவசக்தி (வயது21), செள. கர்ணன் (வயது 23) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்கள் மற்றும் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.