Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இறந்த மூதாட்டியின் கண்களை தானமாக பெற்ற திருச்சி ராயல் லயன்ஸ் சங்கத்தினர்.

0

'- Advertisement -

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் பெற்ற ஒரு ஜோடி கண் தானம்.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ்
சங்கத்தினர் இறந்த மூதாட்டி கண்களை தானமாக பெற்றனர்.

திருச்சிராப்பள்ளி குழுமணி அக்ரஹாரத்தில் வசித்து வந்தவர்
ருக்மா பாய் (வயது 81). ஆகஸ்ட் 28ஆம் தேதி இயற்கை மரணம் அடைந்தார்.

ருக்மா பாய் மகன் பாலாஜி மருமகள் அனு ராதா பாலாஜி சம்மதத்தின் பெயரில் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க தலைவர் முகமது ஷபி, இயக்குனர் பாஸ்கர், நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் ஒரு ஜோடி கண்களை தானமாக பெற்று திருச்சி ஏஜி கண் மருத்துவமனைக்கு இருதயசாமி மூலமாக வழங்கப்பட்டது.
இந்தியாவில் கண் பார்வை இழப்பு சுமார் ஒன்றரைக் கோடி பேருக்கு உள்ளது. இவர்களில் 60 விழுக்காட்டினர் 12 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் பார்வை பெற கண்தானம் பெரிதும் உதவுகிறது. இறந்தவரின் கண்களை அப்படியே எடுத்து, மற்றவர்களுக்குப் பொருத்தமாட்டார்கள். கண்களில் உள்ள “கார்னியா” என்கிற கருவிழியை மட்டும் எடுத்து, பார்வை இழந்தவர்களுக்குப் பொருத்துவார்கள்.

இமைகளை மூடித் தைத்து விடுவதால், அவர்களின் முகம் விகாரமாகத் தெரியாது. இறந்த பிறகு மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ எவ்விதப் பயனும் இல்லாமல் போகக் கூடிய கண்களைத் தானமாகக் கொடுத்தால், அதனால் இருவர் ஒளி பெறுவர் என
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ்
சங்கத்தினர் எடுத்துரைத்தனர்.
கண்தான நிகழ்வில் உற்றார் உறவினர்கள் சுற்றத்தார் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.