மாணவர் எண்ணிக்கை ஏற்ப புதிய நிர்வாக பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வித்துறை பணியாளர் கழகம் கோரிக்கை.
தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வித்துறை பணியாளர் கழகத்தின் மாநில அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இடமாறுதல், கலந்தாய்வு, பதவி உயர்வு, ஆசிரியர் மற்றும் மாணவர் எண்ணிக்கை ஏற்ப புதிய நிர்வாக பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உட்பட 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரிவிக்கப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் தியாகு, பொருளாளர் கனகசபாபதி, திருச்சி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.