திருச்சியில் மாவட்ட அமைச்சூர் டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போட்டியில் 400 மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்பு.
திருச்சியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
திருச்சி மாவட்ட அமைச்சூர் டேக்வாண்டோ சங்கம் மற்றும் தேசியக் கல்லூரியின் சார்பில் திருச்சி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் குழந்தைகள் பிரிவு மற்றும் சப் ஜூனியர், கேடட் ஜூனியர், சீனியர் என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் 400க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர்.
மேலும் இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான டேக்வாண்டடோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கத்தின் செயலாளர் கணேசன் மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.