இன்று வரலட்சுமி நோன்பு:
உலக நன்மை வேண்டி திருச்சி பீமநகரில் வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் கோ-பூஜை.
தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 8.ம் ஆண்டாக மாபெரும் கோ-பூஜை பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காசி ஸ்ரீ முக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.
நிகழ்விற்கு பேரவையின் நிறுவனர் ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். பேரவையின் நிர்வாகிகள் ஜெய் மாருதி ரமேஷ்,தினேஷ் கண்ணன், சித்தார்த், கமல்ராஜ், தனபால் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.