திருச்சியில் முதல் முதலாக புரட்சி தமிழரே போஸ்டர். எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமாரின் அடுத்த பிரமாண்டம்
திருச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார்.
இவர் அன்னதானம், நலத்திட்ட நிகழ்ச்சிகள், கழகப் பொதுச் செயலாளர் மூத்த அமைச்சர்கள் திருச்சி வரும் போதெல்லாம் வரவேற்பு அளிப்பது, எம்ஜிஆர் ஜெயலலிதா ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிறந்த நாள்கள் வரும் போது மிக பிரம்மாண்டமாக போஸ்டர்கள் அடிப்பது என எந்த ஒரு செயலையும் பிரமாண்டமாக செய்து வருபவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் திருப்புமுனை மாநாட்டிற்கு இவர் அடித்த போஸ்டர்கள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்
மதுரை மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இனி புரட்சித் தமிழர் என அழைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து தமிழகத்திலேயே முதல் முறையாக திருச்சி மாநகர் மாவட்டம் முழுவதும் முத்துக்குமார் அடித்துள்ள புரட்சித் தமிழரே என்ற பிரம்மாண்ட போஸ்டர்கள் அதிமுகவினர், மாற்றுக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுகவில் இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்.