திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியில் தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சியில் பர்வீன் சுல்தானா சொற்பொழிவு.
எதிர்பார்ப்புகள் நிறைவேற
துணிச்சலுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.
திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி தன்னம்பிக்கை நிகழ்வில் பர்வீன் சுல்தானா பேச்சு.
திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் இன்று (வியாழக்கிழமை)
தன்னம்பிக்கை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
அகாடமி தலைவர் ரொட்டேரியன் ஆர். விஜயாலயன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா
கலந்து கொண்டு “துணிந்து செல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது;-
இளமை என்பது மை நிரம்பிய பேனா. ஆனால் எழுத தெரியாது. முதுமை எழுத தெரிந்த பேனா. ஆனால் மை இருக்காது. ஆகவே காலத்தை சரியாக அறுவடை செய்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
இங்கு எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் பல பேரிடம் துணிச்சல் இல்லை.
எதிர்பார்ப்புகள் நிறைவேற துணிச்சலுடன் வாழ்க்கை போரை எதிர்கொள்ள வேண்டும்.
துணிச்சலுடன் செயல்படுபவர்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும்.
துணிச்சல் குறைவாக இருப்பவர்களே தோற்கிறார்கள்.
எந்த சூழலிலும் பயத்தை வெளிக்காட்ட கூடாது.
எதிர்மறை கருத்துக்களை உள்வாங்க கூடாது.
காதில் எல்லாமும் வந்து விழும். ஆனால் தேவையானவற்றை உள்வாங்கி திட்டமிட்டு பயணித்தால் வெற்றி நிச்சயம். என்னை ஒரு ஆசிரியை உருப்படாமல் போய் விடுவாய் என்றார். அந்த ஆசிரியை ஓய்வு பெறுவதற்கு முன்பாக அந்த பள்ளியில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.
அவமானங்களை கண்டு ஓடி ஒழியக்கூடாது.
குருட்டான் போக்கில் போனால் வாழ்வில் சாதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திரளான மாணவ மாணவிகள் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.