திருச்சியில் திமுக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வாகை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
தி.மு.க. மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாவட்ட அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கூட்டம்.
கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் வாகை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
தி.மு.க. கலை. இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம், திருச்சி மாவட்டக் கழக அலுவலகமான “கலைஞர் அறிவாலயத்தில்” 24.8.2023 வியாழக்கிழமை இன்று காலை 10.00 மணியளவில். பாபி சந்திரசேகர் தலைமையில். துணைத் தலைவர்கள் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன். எம்.பி., எம்.ஆர். ஆர்.வாசுவிக்ரம் செயலாளர்கள் மா.உமாபதி. அர.திருவிடம், இறையன்பன் குத்தூஸ். வண்ணை அரங்கநாதன்.என்.தில்லைசெல்வம் துணைச்செயலாளர்கள் சி. வீராகணேசன். கவிஞர் நன்மாறன்.
எழில்மாறன். மீனா ஜெயக்குமார். சி.கோபி. ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
மாவட்ட அமைப்பாளர் எஸ்.வி.ராஜ்குமார்,
மாவட்டத் துணைத் தலைவர் பண்ணை சிங்காரவேலன்,
துணை அமைப்பாளர்கள் எஸ்.கே. செந்தில் குமார், கிருஷ்ணவேணி மற்றும் மாநகர நிர்வாகிகள்
திரளாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவித்தபடி. தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தலைவர் கலைஞரின் திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டந்தோறும் காட்சிப்படுத்துதல் மற்றும் கலைஞர் எழுதிய திரைப்பட வசனங்கள் மற்றும் கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.