திருவெறும்பூர் தொகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான உயர்மின் விளக்கு கோபுரத்தை துவக்கி வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
:
திருவெறும்பூர் தொகுதி அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 16 ல் விஷ்வாஷ் நகர் 2வது வீதியில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.7 இலட்சம் மதிப்பிட்டில் உயர் மின் விளக்கு கோபுரத்தை வார்டு மாமன்ற உறுப்பினரும் மண்டலம் மூன்றின் தலைவரும்மான மு.மதிவாணன் தலைமையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
நிகழ்வில் உதவி ஆணையர் ரமேஷ் குமார், பொறியாளர் ஜெகஜீவராமன், இளநிலை பொறியாளர் சீனிவாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.