திருச்சியில் நாளை அமமுக ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்பு.மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிக்கை.


திருச்சியில் நாளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட ஆலோசனை கூட்டம் டிடிவி தினகரன் பங்கேற்பு.
இது குறித்து மாவட்ட செயலாளரும்,
திருச்சி மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் நாளை (18.8.2023) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர்
டி.டி.வி.தினகரன் எழுச்சி உரை ஆற்ற இருக்கிறார்.
எனவே இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி, வட்டக் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலையில் உள்ள சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள், இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

