
திருச்சியில்
சாமியார் வேடம் அணிந்து விவசாயிகள் 20வது நாளாக போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி மாதந்தோறும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
காய்கறிகள் விலை போகாமல் விவசாயிகள் தரையில் கொட்டுவதை தடுப்பதற்கு கிராமங்கள் தோறும் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சத்திரம் பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
20-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நடந்தது.
இதில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் லாபகரமான விலை தராமலும், காவிரியில் தண்ணீர் திறந்து விடாமலும் இருக்கும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக விவசாயத்தை விட்டு விவசாயிகளை விரட்டி விட்டதாக கூறி சாமியார் வேடம் அணிந்து ருத்ராட்ச மாலையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.