திருச்சியில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி ஓபிஎஸ் அணியினர் மற்றும் அமமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வலியுறுத்தி ஓ.பி.எஸ்.அணி.- அ.ம.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் .
கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல் முருகன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்பு செயலாளரும் திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் ரத்தினவேல், எம்.ஆர். ராஜ்மோகன், சாமிக்கண்ணு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகரன், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வக்கீல் ராஜ்குமார், பேரவை செயலாளர் ஜவஹர்லால் நேரு, ஆர்.சி.கோபி, வசந்தி, ஜோதிவானன், பத்மாவதி, முன்னாள் கோட்டத் தலைவர் மனோகரன், சௌந்தர், சுதாகர், எஸ். பி கார்த்திகேயன், சந்திரன், சுமங்கலி சம்பத், ஏபி சேகர், வைத்தியநாதன், ராஜா முகமது, தாயார் சீனிவாசன், மலைக்கோட்டை விஸ்வா, , ஷாஜகான், கருமண்டபம் நடராஜன், வக்கீல் ராஜா, மார்க்கெட் அயூப், விஸ்வநாதன், ரஜினி பெரியண்ணா, ஐ டி ஜ ராமச்சந்திரன், செல்லப்பன், செங்கல் மணி,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், டோல்கேட் கதிரவன், முதலியார் ராமமூர்த்தி, எடத்தெரு ரவிச்சந்திரன், சாந்தா, கோமதி மங்கை, சுபத்திரை, சசிகுமார், வேதாத்திரி நகர் பாலு,நாகநாதர் சிவகுமார், பெஸ்ட் பாபு, நாகூர்மீரான் , வக்கீல் பிரகாஷ், உமாபதி, அல்லூர் ராமலிங்கம்,கல்நாயன் சதீஷ், கமரூதீன், தருண், சக்திவேல், நல்லம்மாள், ரஜினி, உறையூர் சாமிநாதன் சிறுபான்மை பிரிவு பக்ருதீன், ஐ. டி. விங் தருண்,மற்றும் பகுதி செயலாளர்கள் வெங்கட்ரமணி, உமாபதி, ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் அஷ்ரப் ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.