மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 28 வது பொது மாநாடு திருச்சியில் இன்று மாநாட்டிற்கு மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
திருச்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வினோத் வரவேற்றார்.
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பாண்டியராஜன் அறிக்கையை வாசித்தார். வரவு செலவு அறிக்கையை மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொருளாளர் செந்தில் நாயகம் சமர்ப்பித்தார்.
காப்பீட்டு ஊழியர் சங்க தஞ்சை கோட்ட தலைவர் செல்வராஜ்,
சி ஐ டி யு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன்,
பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க மதுரை மாவட்ட துணைத் தலைவர் மணிவேல், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சென்னை மண்டல தலைவர் பாலகிருஷ்ணன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோவை மண்டல பொதுச்செயலாளர் வேணுகோபால், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
காப்பீட்டு கழக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில்
4 பொதுத்துறை
இன்சூரன்ஸ் நிறுவனங்களை உடனடியாக
ஒன்றிணைத்திட வேண்டும்.
பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து பிரிவுகளிலும் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ள பணி இடங்களை உரிய முறையில் உடனே நிரப்ப வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
குடும்ப ஓய்வூதியம் 15 சதவீதத்தில் இருந்து 30 சதமாக உடனடியாக உயர்த்த வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
மணிப்பூரில் உடனடியாக அமைதியை திரும்ப செய்வதற்கும், பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்கள் அனைவருக்கும் நீதியும், நிவாரணம் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விரைவில் சட்டமாக்க வேண்டும். மத்திய அரசு, பொதுத்துறை விரோத தாராளமய, தனியார்மய, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல துணைத்தலைவர் புஷ்பராஜன் நிறைவுரையாற்றினார்.
முடிவில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைப் பொருளாளர் மனோஜ் கார்த்திக் நன்றி கூறினார்.