Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நான் இரட்டை இலை தான்.பொன்முடியை அதிர வைத்த மூதாட்டி.இதுதான் அதிமுகவின் பலம்.

0

'- Advertisement -

 

அதிமுகவின் தொண்டர்கள் எம்ஜிஆர் ரசிகர்கள், ஜெயலலிதா ரசிகர்கள் இன்றைக்கும் அதிமுகவில்தான் நீடிக்கின்றனர். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் பலம் வாய்ந்த தொண்டர்கள் படையை கொண்டது. அதிமுகவின் வாக்கு வங்கி என்றைக்கும் மாறாமல் இருப்பதற்கு காரணம் அந்த இரட்டை இலை சின்னம்தான்.

எத்தனையோ தலைவர்கள் மாறலாம். கட்சி விட்டு கட்சி தாவலாம். ஆனால் அதிமுகவின் தொண்டர் படை என்றைக்கும் மாறாது. அதிமுகவினர் பலர் கைகளில் இன்றைக்கும் இரட்டை இலை சின்னத்தை பச்சையாக குத்தியிருப்பார்கள். அது ரத்தத்தோடு கலந்திருக்கும். அதை எப்போதும் மாற்றவே முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்த பின்னரும், கட்சி பிளவு பட்ட பின்னரும் அதன் தொண்டர் பலம் அப்படியேதான் உள்ளது. ஆட்சி மாறினாலும் அமைச்சரே வந்து கேட்டாலும் நான் இரட்டை இலைதான் என்று தைரியமாக சொல்வார்கள் அதிமுக தொண்டர்கள். அப்படி ஒரு சம்பவம்தான் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

பல லட்சம் மக்கள் ஆவலுடன் காத்திருந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்திருக்கிறார்.
மாநிலம் முழுவதும் முகாம்கள் நடைபெற வேண்டும் என்றும் அமைச்சர்கள் அதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கும் முகாமை பார்வையிட சென்றார்.

விண்ணப்பம் வாங்க வந்த மூதாட்டி ஒருவரிடம், எந்த ஊருமா நீ என்று பொன்முடி கேட்டார். அதற்கு அந்த மூதாட்டியோ முத்தியால் பேட்டை என்று சொல்கிறார். இங்கதான் வரணுமா என்று அருகில் இருப்பவரிடம் விசாரித்தார் பொன்முடி. என்ன வேலை செய்ற நீங்க எதுக்கு வந்திருக்கீங்க என்று கேட்டார். அதற்கு அந்த பெண் தலையசைக்க.. ஆயிரம் ரூபாய் கொடுக்கப்போறங்க அதற்கு பார்ம் தறாங்க என்று ஒரு பெண் சொன்னார். சொல்லுங்க தெரியுதுல்ல.. யார் கொடுக்கறாங்க தெரியுமா என்று மீண்டும் அந்த மூதாட்டியிடம் கேட்டார். அந்த பெண் பதில் சொல்லலாமல் அமைதியாக இருக்க, விண்ணப்பத்தை நிரம்பும் பெண்ணோ, முதல்வர் ஸ்டாலின்னு சொல்லுங்க என்று எடுத்துக்கொடுத்தார்.

அதைச்கேட்டு அந்த மூதாட்டி இல்ல இல்ல.. நான் எப்பவுமே இரட்டை இலைதான் என்று சொல்ல அதைக்கேட்டு பொன்முடி புருவத்தை உயர்த்தி ஆச்சரியத்தோடு அட என்று பார்த்து சிரித்தார். பின்னர் சிரித்துக்கொண்டே அந்த பெண் ஏதோ சொல்ல முற்பட போடும் போதும் என்று கூறினார்.

பொன்முடி.தொடர்ந்து பேசிய பொன்முடி அப்ப எல்லாருக்கும் நாம கொடுக்கறோம் இரட்டை இலைக்கும் கொடுக்கறோம் என்றும் சொல்லி விட்டு ரைட் ரைட் என்று சொன்னார்.

அதன் பிறகு முகாமில் கூடியிருந்த பெண்களைப் பார்த்து ஆயிரம் ரூபாய் வருவது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி என்று சொன்னார். விலைவாசி ஏறினாலும் தக்காளி கிலோ 100 ரூபாய் விற்றாலும் 1000 ரூபாய் வருதுல்ல.. அது மகிழ்ச்சியா இல்லையா என்று சொல்லிக்கொண்டே போகும் போது ஒரு பெண் ஏதோ கேட்க.. போய் அதை மோடியிடம் கேளுங்க என்று சொன்னார். பின்னர் அதையும்தான் ரேசன் கடையில் 60 ரூபாய்க்கு கொடுக்கறாங்க என்று சொன்னார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.