திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் 65 வார்டுகளில் இருந்தும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது.’
N
அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால் கடந்த மூன்று ஆண்டுகளாக தீ விபத்துகள் பெரியளவுவில் நடைபெறவில்லை.
இந்நிலையில் நேற்று மதியம் திடீரென குப்பைக் கிடங்கில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சி பணியாளா்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை ரூபாய் 80 கோடியில் தனியார் மையங்கள் மூலம் மறு சுழற்சி செய்யும் பணிகள் நடைபெறும் நிலையில், கடந்த சில மாதங்களாக கிடங்குக்கு குப்பைகள் வரத்து அதிகரிப்பால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது . சாலைகளில் புகை மூட்டத்துடன் காணுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடனே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.
நேற்று மாலை தீபனைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த குப்பைக்கிடங்கு அமைந்துள்ள இடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதிக்கு உட்பட்டு வருகிறது என்பதால் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆர்வம் காண்பித்து குப்பைக்கிடங்கை அற்புறப்படுத்த வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர்கள்.