திருச்சி:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து திமுகவில் இணைந்த சுயேச்சை கவுன்சிலர் எல்.ஐ.சி.சங்கர்.
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து சுயேச்சை மாமன்ற உறுப்பினர் சங்கர் தலைமையில் இனைந்த பல்வேறு கட்சியினர்.

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி மாநகரக் கழக செயலாளர்
மு. மதிவாணன் மற்றும் பகுதி கழகச் செயலாளர்
ஆர் ஜி பாபு முன்னிலையில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 20ன் சுயேச்சை மாமன்ற உறுப்பினரும் தேமுதிக மாவட்ட கழகத் துணைச் செயலாளருமான
எல்.ஐ.சி.சங்கர் மற்றும் 50 க்கு மேற்பட்டவர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன் மற்றும் வட்ட கழக செயலாளர்கள் சுருளி ராஜன் செந்தில் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜே.மகேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.