இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் திருச்சியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின் முறை சங்கம் திருச்சிராப்பள்ளி இணைந்து கல்வித் தந்தை காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் மற்றும் கல்வித் திருவிழா இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே டி ஆர் சுரேஷ் தலைமையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் எஸ் பி பாபு, இந்திர தேச மக்கள் கட்சி தலைவர் பாச ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே டி ஆர் சுரேஷ் வரவேற்றார்.