திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு தீயணைப்பு துறை சார்பில் காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி செய்து காட்டப்பட்டது.
திருச்சி மத்திய மண்டலத்தில் தீயணைப்பு மீட்புத்துறை சார்பில் மத்திய மண்டல மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீ அபாயம் மிக்க மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் மாதிரி ஒத்திகை பயிற்சி தணிக்கை மற்றும் தீ பாதுகாப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே நவல்பட்டில் உள்ள தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நவல்பட்டு தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர்.
இதில் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் மணவாளன் உட்பட பயிற்சி கல்லூரி காவலர்கள் மற்றும் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதே போல் நவல்பட்டு உள்ள திருவெறும்பூர் வட்டார மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களுக்கும், தீ தடுப்பு ஒத்திகைமற்றும் பாதுகாப்பு ஒத்திகைகளை நவல்பட்டு தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர்.