Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மறக்க முடியுமா நெஞ்சம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா.

0

'- Advertisement -

 

மறக்குமா நெஞ்சம் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது –

படத்தில் பணியாற்றியவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒவ்வொரு பாடலையும் வெளியிட்டனர்

அறிமுக இயக்குனர் யோகேந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள மறக்குமா நெஞ்சம் என்கிற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் யோகேந்திரன் படத்தின் கதாநாயகன் விஜய் டிவி புகழ் ரக்சன், ராகுல், நடிகை
கழ்மலினா, மேட்லி, ஸ்வேதா, இசையமைப்பாளர் சச்சின் வாரியர், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கால வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தின் கரு இருப்பதன் காரணமாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய இயக்குனர் நடிகர் உள்ளிட்டவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு பாடலும் அவர்களை வைத்து வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த படத்தின் இயக்குனர் யோகேந்திரன் படம் பள்ளிக்கால வாழ்க்கையை மையப்படுத்தி இருப்பதால் படத்தில் பணியாற்றவர்களின் ஆசிரியர்களை கொண்டு இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அறிமுக நடிகர் நடிகைகளை கொண்டு படத்தை எடுத்துள்ளோம்.
இந்த படம் சிறப்பாக வந்துள்ளது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்

 

இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆடை வடிவமைப்பாளர், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட தங்களது குடும்பத்தினர் உடன் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.