Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம்.

0

 

இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம்.

ஆண்டுதோறும் ஜூலை 6-ம் தேதி லுாயிஸ் பாய்ஸ்டர் என்னும் பிரெஞ்சு உயிரியியல் வல்லுநரின் நினைவாக உலக விலங்கு வழி நோய்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவர் 1885-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி வெறிநாய் கடித்த சிறுவனுக்கு தடுப்பூசி மருந்தை முதல் முதலாகச் செலுத்தி வெற்றி கண்டார்.
அவரை கவுரவிக்கும் வகையிலும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இது குறித்து மதுரை மாவட்டம் முடுவார்பட்டி கால்நடை மருந்தக அரசு கால்நடை உதவி மருத்துவர் மெரில்ராஜ் கூறியதாவது:

விலங்கு வழி மனிதர்களுக்குப் பரவும் நோய்கள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் மட்டுமில்லாது கொசுக்களின் மூலமாகவும் பரவுகிறது.

இன்றைய காலகட்டத்தில் வெறிநாய் வைரஸ், பிளேக், இபோலா வைரஸ், இன்புளூயன்சா, லெப்டோ பைரோசிஸ், பறவைக் காய்ச்சல், ஆந்த்ராக்ஸ், மாடுகள் மூலம் பரவும் காச நோய், புருசெல்லோசிஸ், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற விலங்கு வழி நோய்கள், மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ உணவு, நீர் மற்றும் சுற்றுப் புறங்களின் மூலம் பரவுகின்றன.

ஒட்டுண்ணிகள் மூலமாக மனிதர்களுக்குப் பரவும் விலங்கு வழி நோய்கள் லீஸ்மேனியாசிஸ், டாக்சாகாரா நேனிஸ், எக்கினோ காக்கஸ் கிரானுலோசஸ், ஸ்கேபிஸ் (சொறி சிரங்கு) போன்றவை இன்னும் மிக முக்கியமானதாக அறியப்படுகிறது.

ரேபிஸ் நோய் (வெறி நாய்) நாய் கடிப்பதன் மூலம் உமிழ் நீர் வழியாக ரேபிஸ் வைரஸ் இந்நோயை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் 95 சதவீத மனிதர் களில் ரேபிஸ் நோய், நாய்க் கடியின் மூலமே ஏற்படுகிறது.

இந்திய மாநிலங்களில் ரேபிஸ் நோயின் மூலம் ஏற்பட்ட மனிதர்கள் உயிரிழப்பில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. ரேபிஸ் இல்லாத மாநில மாக கோவா அடையாளம் கண்டறியப் பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் நோயால் உலக அளவில் ஏற்படும் உயிரிழப்பில் 36 சதவீதம் இந்தியாவில் தான் நிகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.